ராகுலுக்கு சிறை தண்டனை: தலைவர்கள் கருத்து

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (55) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் ராகுல் டுவிட்டரில் பக்கத்தில் உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாக கொண்டது எனது மதம். சத்தியமே என் கடவுள் அதை அடைய அஹிம்சையே ஒரே வழி என்ற காந்தியின் கருத்தை
Jail sentence for Rahul: Leaders say  ராகுலுக்கு சிறை தண்டனை: தலைவர்கள் கருத்து

புதுடில்லி: பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


இந்நிலையில் ராகுல் டுவிட்டரில் பக்கத்தில் உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாக கொண்டது எனது மதம். சத்தியமே என் கடவுள் அதை அடைய அஹிம்சையே ஒரே வழி என்ற காந்தியின் கருத்தை பதிவிட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

ராகுலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதியை மாற்றி கொண்டே இருந்ததால், இப்படி தான் தீர்ப்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. சட்டப்படி நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா

என் சகோதரன் ஒரு போதும் பயந்ததில்லை. பயப்பட மாட்டார். உண்மையை பேசி வாழ்ந்தோம். உண்மையை பேசுவோம். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம்.சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்

மீடியாக்களின் குரலை அடக்க முயற்சி நடக்கிறது. நீதித்துறையில் அதிக்கம் செலுத்தவும் முயற்சி நடக்கிறது. வேறு கொள்கை கொண்ட அரசியல் தலைவர்கள் மீது இந்தளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.latest tamil news


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ஜனநாயகம் தொடர்ந்து ஆபத்தில் உள்ளது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மீது அழுத்தம் உள்ளது. அவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ராகுல் பேசிய கருத்துகள் சாதாரணமானவை. அவர் தைரியமானது. அவரால் மட்டுமே தேஜ கூட்டணியை வீழ்த்த முடியும்டில்லி முதல்வர் கெஜ்ரிவால்


பாஜ., அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, ஒழிக்க சதி செய்யப்படுகிறது. காங்கிரசுடன் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், அவதூறு வழக்கில் இது போன்று தண்டனை வழங்குவது சரியானது அல்ல. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை கேள்வி கேட்பது தான். நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், அதன் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

Sethu Thangavelu - Chennai,இந்தியா
29-மார்-202321:00:49 IST Report Abuse
Sethu Thangavelu ராகுல் பாராளுமன்றத்தில் மோடியை கட்டிப்பிடித்து விஷமமாக சிரித்ததற்க்கே தண்டனை தரலாம் .
Rate this:
Cancel
M. Palanivelu - Kanchipuram,இந்தியா
24-மார்-202316:00:47 IST Report Abuse
M. Palanivelu இவரது பேச்சை தப்பானது என்று நீதிபதி தீர்ப்பு அளித்த நிலையில் அதனை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் பற்றி என்ன சொல்வது.
Rate this:
Cancel
Subramanian - Mumbai ,இந்தியா
24-மார்-202306:26:42 IST Report Abuse
Subramanian பிரதம மந்திரியை இழிவாக பேசியதால் தண்டனை இல்லை. மோடி என்ற சமூகத்தை இழிவாக பேசியதாக தண்டனை தரப்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X