தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து துவக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, எட்டயபுரம் போலீசார் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்
.