இரண்டாவது கோடு மெலிதாக தெரிந்தால் கர்ப்பமா.. இல்லையா...?

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | |
Advertisement
கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களுக்கு சிறிது நாட்கள் தள்ளிப்போனாலே போதும். உடனே பிரகனன்சி டெஸ்ட் கிட் (pregnanacy test kit) வாங்கி, கர்ப்பமாக உள்ளோமா? என பலரும் வீட்டிலேயே பரிசோதிப்பர்; பின்னர் தான் டாக்டரிடமே செல்வர். பரிசோதனையில், ஒரு கோடு வந்தால் கர்ப்பமாக இல்லை; இரண்டு கோடு வந்தால் கர்ப்பம் என எளிதாக கண்டுபிடிக்கின்றனர். ஆனால், இரண்டுக்கும் நடுவே ஒருசில நேரங்களில்
If the second line looks thin, is it pregnant..or not...?  இரண்டாவது கோடு மெலிதாக தெரிந்தால் கர்ப்பமா.. இல்லையா...?

கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களுக்கு சிறிது நாட்கள் தள்ளிப்போனாலே போதும். உடனே பிரகனன்சி டெஸ்ட் கிட் (pregnanacy test kit) வாங்கி, கர்ப்பமாக உள்ளோமா? என பலரும் வீட்டிலேயே பரிசோதிப்பர்; பின்னர் தான் டாக்டரிடமே செல்வர். பரிசோதனையில், ஒரு கோடு வந்தால் கர்ப்பமாக இல்லை; இரண்டு கோடு வந்தால் கர்ப்பம் என எளிதாக கண்டுபிடிக்கின்றனர். ஆனால், இரண்டுக்கும் நடுவே ஒருசில நேரங்களில் இரண்டாவது கோடு மிகவும் மெலிதாக மங்கலாக தெரியும்போது, பலத்த குழப்பம் ஏற்படக்கூடும். ஒரு கோடு வழக்கம்போல் தடிமனாகவும், மறுகோடு மெலிதாகவும் இருந்தால் ஃபெயின்ட் லைன் பிரக்னன்சி (faint line on pregnancy) என குறிப்பிடப்படுகிறது.

பிரகனன்சி டெஸ்ட் கிட் வாங்கியவுடனேயே, முதலில் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளும் போது தவறான முடிவை காட்ட வாய்ப்புள்ளது. டெஸ்ட் கிட்டில் ஆங்கில எழுத்தில் சி (கன்ட்ரோல்) மற்றும் டி (டெஸ்ட்) என இரு கோடுகள் இருக்கும். உங்களின் சிறுநீர் துளிகளை வைத்து பரிசோதிக்கும் போது முதலில் இந்த 'சி' யில் தான் முதல் கோடு வரக்கூடும். இது பரிசோதனை மேற்கொண்ட ஐந்து நிமிடங்களுக்குள் பளீரென கோடு வர வேண்டும். அப்போது இந்த கார்டு தரமாக உள்ளதாக அர்த்தம்.


latest tamil news


பரிசோதனையில் 'டி' என்ற காலத்தில் கோடு வந்தால் கர்ப்பமாக இருப்பதாகவும், கோடு வராவிட்டால் தற்போது கர்ப்பமாக இல்லை எனவும் அர்த்தமாகும். ஆனால் ஒருசில நேரங்களில் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இரண்டாவது காலத்தில் கோடு மெலிதாக மங்கலான நிலையில் தெரியக்கூடும். மருத்துவத்தில் இது வீக்லி பாசிட்டிவ் பிரக்னன்சி (weakly positive pregnancy) என குறிப்பிடப்படுகிறது. அதாவது கர்ப்பமாக இருக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, கர்ப்பத்தை உறுதியாக கூற முடியாது.

மாதவிடாய் சுழற்சி ரெகுலராக இருப்பவர்கள், கடைசி மாதவிடாய் முடிந்த 35 முதல் 40 நாட்களுக்குப் பின் வீட்டில் பரிசோதனை செய்து பார்க்கலாம். ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னதாகவே பரிசோதனை மேற்கொள்ளும் போது இதுபோன்ற மெலிதான கோடு தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. ஒருவர் கர்ப்பமடைந்தவுடன் உடலில் ஹெச்.சி.ஜி., (HCG) ஹார்மோன் உற்பத்தி துவங்குகிறது. கரு வளர்ச்சி அடையும் போது, இந்த ஹார்மோன் அளவும் அதிகரிக்கிறது. சிறுநீரில் போதியளவு ஹெச்.சி.ஜி., இருந்தால் மட்டுமே அடர் பிங்க் நிறத்தில் கோடு பளீரென தெரியக்கூடும். முன்னதாகவே பரிசோதிக்கும் போது ஹெச்.சி.ஜி., அளவு மாறுபடுவதால் கோடு மங்கலாகத் தெரியக்கூடும்.


latest tamil news


இதுபோன்ற சூழலில் மேலும் 10 நாட்கள் காத்திருந்து பின்னர் பரிசோதிக்கலாம். அதேவேளையில் இரண்டு கோடுகளும் மங்கலாக தெரிந்தால் மீண்டும் புதிதாக கார்டு வாங்கி பரிசோதிக்க வேண்டும். தொடர்ந்து, டாக்டரிடம் கலந்தாலோசித்தால் ரத்தப்பரிசோதனை மூலமாக எளிதாக தெளிவு பெறலாம்.

எதிர்பாராத நிலையில் ஒருசிலருக்கு அபார்ஷனுக்கு பின்னர், இரு வாரங்கள் கழித்து பரிசோதிக்கும் போது இரு கோடுகள் வர வாய்ப்புள்ளது. அபார்ஷன் நடந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு, குறைந்தப்பட்சமாக ஒரு மாதத்துக்காவது உடலில் கர்ப்ப கால ஹார்மோன்கள் இருக்கக்கூடும். எனவே, நாம் கர்ப்பமாக இருக்கிறோமா என சந்தேகிக்காமல், டாக்டர் அட்வைஸின் படி நடக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X