ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய வெர்னா 2023 மாடல் புக்கிங்கில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புகழ்பெற்ற மாடலான வெர்னா காரை அப்டேட் வெர்ஷனில் விற்பனக்கு மீண்டும் களமிறக்கியுள்ளது. அதோடு காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இந்நிலையில், அறிமுகப்படுத்தபட்ட நாளில் இருந்தே இந்த புதிய வெர்னா காருக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான புக்கிங்கள் பெற்று சாதனை படைத்துள்ளது
![]()
|
2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பைர்ட் (NA) பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.
![]()
|
இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் என மூன்று விதமாக வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது இனி கிடைக்காது.
![]()
|
தோற்ற அமைப்பில் மட்டும் இந்த 2023 ஹூண்டாய் வெர்னா நாடலில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10,89,000 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17,37,000 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.