வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கி.மீ தூரத்திற்கு 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த 21 லட்சம் சாலை விபத்துகளில் 7 லட்சம் பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.