ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை: ராஜ்நாத் பதிலடி

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை என்ற பாடத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ராகுல் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது: ஆயுதங்களால் ஏற்படும் காயத்தை விட, வார்த்தைகளால் ஏற்படும் காயம் ஆழமாக இருக்கும் என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். தீர்ப்பின் மூலம்
Words deadlier than weapons, Rajnath Singh on Rahul Gandhis convictionஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை: ராஜ்நாத் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை என்ற பாடத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ராகுல் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது: ஆயுதங்களால் ஏற்படும் காயத்தை விட, வார்த்தைகளால் ஏற்படும் காயம் ஆழமாக இருக்கும் என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். தீர்ப்பின் மூலம் அனைவரும் பாடம் படித்து கொள்வதுடன், பொது வெளியில் பேசும் போது எல்லை தாண்டக்கூடாது எனக்கூறியுள்ளார்.


ராகுல் வழக்கில் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்., தலைவர் மல்லிகார்ஜூ கார்கே, நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்பட்டனர் எனக்கூறியிருந்தார்.


latest tamil news

தீர்ப்பு குறித்தும், கார்கே கருத்து குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கார்கேயின் கருத்து, நீதித்துறை மீது அவருக்கு நம்பிக்கையில்லாததை காட்டுகிறது. நீதித்துறையை தனது பாக்கெட்டில் வைத்து கொள்ள காங்கிரஸ் விரும்புகிறதா?


ராகுல் தகுதி நீக்கம் செய்யப்படுவது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜாதியை குறிப்பிட்டு மக்களை ராகுல் அவமானப்படுத்தி உள்ளார். அவரின் கருத்துகள் அதிகபட்ச அவதூறு என்றார்.


தீர்ப்பு தொடர்பாக ராகுலின் கருத்து குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மக்களை விமர்சிக்க ராகுலுக்கு சுதந்திரம் வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதா? நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவின் சட்டப்படி, தனிநபர், அமைப்புகள் என யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபனை உள்ளது. விமர்சனங்களை வீச ராகுலுக்கு முற்றிலும் சுதந்திரம் வேண்டும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202304:49:43 IST Report Abuse
J.V. Iyer உண்மை. உண்மை. நாக்கு அழுகி இருந்தால்தான் இப்படி கேவலமாக பேசிவரும்.. ராகுல் வாதிராவுக்கு இது ஒன்றும் மண்டையில் ஏறாது. அவர் ஐக்யூ அப்படி.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
23-மார்-202322:32:10 IST Report Abuse
r ravichandran இந்தியா இந்த அளவிற்கு குட்டி சுவர் ஆனதற்கு காரணமே நேரு, இந்திரா, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தான்.
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
23-மார்-202321:32:56 IST Report Abuse
M.Selvam ஊருக்கே புத்தி சொல்லும் இவர்கள் கட்சியில் தான் அனைத்து உத்தமருங்கோ அரிச்சந்திரன் பரம்பரை இருக்கிறார்கள் போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X