கட்சியினர் என்பதால் நடவடிக்கை இல்லையா ?: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

Added : மார் 23, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: திமுக பிரமுகர் ஆயிஷா அவமரியாதை செய்ததால், உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார். கட்சியினர் என்பதால் குற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை
No action because they are party members?: Annamalai question for DMK   கட்சியினர் என்பதால் நடவடிக்கை இல்லையா ?: திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: திமுக பிரமுகர் ஆயிஷா அவமரியாதை செய்ததால், உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார். கட்சியினர் என்பதால் குற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி முன்னாள் பேரூராட்சித் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.


அப்போது சுடலைமாடனிடம் ஆயிஷா பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால் அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் குடித்த சுடலைமாடன் 55, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (மார்ச் 23) உயிரிழந்தார்.


இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார்.


திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன


மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பாஜ., சார்பில் சார்பாக வலியுறுத்துகிறேன்.


பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்:


தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-மார்-202304:13:59 IST Report Abuse
D.Ambujavalli யாரோ என்னவோ சொன்னால் நேராகப் புகார் கொடுத்து, அவருடன் பாதிக்கப்பட்ட சிலருடன் மேலிடத்தில் அணுகுவதை விட்டு உயிரை விட்டால், அந்த அம்மா என்ன இவர் குடும்பத்தைக் காப்பாற்ற வரர போகிறார்? எந்த அளவுக்கு இவர் நொந்து போலிருந்தால் உயிரை வெறுத்திருப்பார்? இவர்களையெல்லாம் யார் கேட்பார்கள்? கூடை செங்கல்லும் பிடாரி என்றால் முதல்வர் யாரையும் நடக்காது புலம்பிக்கொண்டு திரிவதோடு சரி
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
23-மார்-202319:53:28 IST Report Abuse
T.Senthilsigamani Where is thirumaa? He is busy in apprrciating vidiyya arasu.Still no one arrested for vengaivayal incident.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
23-மார்-202319:13:49 IST Report Abuse
Bala இந்தமாதிரி சம்பவங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டின் சாபக்கேடு ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X