பெண்களின் முக அழகை எடுப்பாக காட்டுபவை அவர்களின் புருவங்கள் தான். கண்கள் கவர்ச்சியாக இருந்தும் புருவம் அடர்த்தியாக இல்லையெனில், முகத்தின் அழகு சற்று டல்லாகவே தெரியும். ஐ ப்ரோ அழகை கூட்ட பல்வேறு அழகு சிகிச்சைகள் உள்ளன. ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிகிச்சைகள் மூலம், உங்கள் புருவங்களின் அடர்த்தியையும் அழகையும் இயற்கையாகவே அதிகரிக்க முடியும்.
தினமும் இரவில் தூங்கும் முன்னர், விளக்கெண்ணையை புருவத்தில் தடவி 2-3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
![]()
|
ஐ ப்ரோ பென்சிலை விளக்கெண்ணெயில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால், அதே வடிவத்திற்கு புருவம் வளரும்.
தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது சூடு செய்து இளஞ்சூட்டிலேயே புருவத்தில் மசாஜ் செய்து வரலாம்.
2 சின்ன வெங்காயங்களை தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் ஒரு பஞ்சை நினைத்து புருவத்தில் தடவி வர விரைவிலேயே முடி வளர்வதை காணலாம்.
![]()
|
கற்றாழை சதைப் பகுதியை புருவத்தில் காலை மாலை என தடவிவந்தால், புருவ முடிக்கு பலமளித்து அடர்த்தியாக வளரும்.
புருவத்திற்காகவே கடைகளில் கிடைக்கும் கிரீம் வாங்கி பயன்படுத்தலாம். வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும், புருவமுடி வளர ஆரம்பிக்கும். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.