பிளாக் அண்ட் ஒயிட் லெஹங்காவில் ரகுல் பிரீத் சிங்கின் அசத்தல் லுக்

Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | |
Advertisement
தடையற தாக்க, தீரன் அதிகாரம் மற்றும் என்.ஜி.கே., என தமிழில் கணிசமான படங்களில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக உள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங். பாலிவுட் படங்களில் பிசியாக உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ரகுல். பிரபல பேஷன் டிசைனர் சீமா குஜ்ரால்
Rahul Preet singhs stunning look in black and white lehenga  பிளாக் அண்ட் ஒயிட் லெஹங்காவில் ரகுல் பிரீத் சிங்கின் அசத்தல் லுக்

தடையற தாக்க, தீரன் அதிகாரம் மற்றும் என்.ஜி.கே., என தமிழில் கணிசமான படங்களில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக உள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங். பாலிவுட் படங்களில் பிசியாக உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ரகுல்.


latest tamil news


பிரபல பேஷன் டிசைனர் சீமா குஜ்ரால் வடிவமைத்த லெஹங்காவை அணிந்தவாறு அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டாவில் நேற்று பதிவிட்டுள்ளார் ரகுல். மென்மையான வெள்ளி ஜரிகையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷனில் உள்ளது இந்த லெஹங்கா. மேட்சிங் ஆக அகலமான பார்டரில் வெள்ளி நிற சரிகைகளுடன் அழகாக தோலில் சரிந்துள்ளது கருப்பு நிற துப்பட்டா. இதற்கேற்ப வளையல், நெக்லஸ் மற்றும் மோதிரங்கள் ரகுலை அலங்கரிக்கின்றன. தாழ்வான போனிடெயிலில் கூந்தலை அலங்கரித்திருந்தார்.



latest tamil news


தங்க நிறத்தில் மின்னும் ஷராரா உடையில் அசரடிக்கும் ரகுல் பிரீத் சிங்... பேஷன் டிசைனர் தருண் தஹிலியான் வடிமைத்த இந்த ஷராராவில், பழுப்பு மற்றும் தங்க நிற நிறத்தில், சிக்கலான ஜரிகை வேலைப்பாடுகள் உள்ளடங்கியுள்ளன. ஜூம்கா காதணிகள் மற்றும் மோதிரங்களுடன் எளிய மேக்கப்பில் ஒய்யாரமாக அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். புடவைகள், லெஹங்காக்களை போன்றே ஷராரா உடைகளும் பலரின் சாய்ஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



latest tamil news


இன்றைய டிஜிட்டல் உலகில் சில மாற்றங்களை புகுத்தும் போது புடவையில் கூட மாடர்ன் லுக் தரலாம். இதற்கு உதாரணமாக பிரபல பேஷன் டிசைனர் பாயல் கந்தவாலா வடிவமைத்த அழகிய புடவையில் ரகுல் ஜொலிக்கிறார். வெளிர் பிஸ்தா நிற புடவையில் ஆங்காங்கே சிவப்பு, கருப்பு நிறத்தில் பிரின்டட் டிசைன்கள் உள்ளன. ஃபுல் ஸ்லீவ், குளோஸ் நெக் என மேட்சிங் பிளவுஸ், தொங்கும் காதணிகள், நியூடு லிப்ஸ்டிக் என அல்ட்ரா மாடர்ன் மங்கையாக அசத்தல் போஸ் கொடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X