வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என கடந்த 19ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதை தொடர்ந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் லேசான மழை பெய்தது. கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட அவலூர் பேட்டையில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்நிலையில் இன்று(23 ம் தேதி) மாலை மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.