தள்ளு..தள்ளு...தள்ளு.. : பழுதாகி நின்ற பேருந்தை அரை கி.மீ., தள்ளிய போலீஸ்

Added : மார் 23, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
மயிலாடுதுறை :மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும், அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை, போதிய பராமரிப்பு இல்லாததால், காயலான் கடைக்கு போடும் நிலைமையில் உள்ளன. இதனால், அவற்றில் பயணிக்கும் மக்களின் நிலைமை மட்டுமின்றி, பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் நிலைமையும், பரிதாபமாக உள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு பேருந்துகள் பாதி வழியிலேயே அடிக்கடி,
The bus that broke down in the middle of the road: half a km, the police pushed the distance  தள்ளு..தள்ளு...தள்ளு.. : பழுதாகி நின்ற பேருந்தை அரை கி.மீ.,  தள்ளிய போலீஸ்

மயிலாடுதுறை :மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும், அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை, போதிய பராமரிப்பு இல்லாததால், காயலான் கடைக்கு போடும் நிலைமையில் உள்ளன.

இதனால், அவற்றில் பயணிக்கும் மக்களின் நிலைமை மட்டுமின்றி, பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் நிலைமையும், பரிதாபமாக உள்ளது.


மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு பேருந்துகள் பாதி வழியிலேயே அடிக்கடி, பழுதாகி நிற்பதும், நிலைமையை சமாளிக்க, பயணியர் மாற்று பேருந்துகளில், அனுப்பி வைக்கப்படும், தொடர் கதையாகி வருகிறது.


இன்று (மார்ச்.,23)ம் தேதி, சித்தமல்லியில் இருந்து மயிலாடுதுறை டவுன் பஸ் நிலையம் நோக்கி வந்த பேருந்து, பஸ் நிலையம் அருகே வந்தபோது, திடீரென பழுதாகி நின்றது.


முக்கிய சாலையில், பேருந்து பழுதாகி நின்றதால், பேருந்தில் வந்த பயணியரும், அதே பகுதியில் நடந்த, போராட்டத்துக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த, போலீசாரும் இணைந்து, பேருந்தை அரை கிலோ மீட்டர் துாரத்துக்கு, தள்ளி சென்று, இயக்க வைத்தனர்.


அதில், சற்று தொப்பை வைத்திருந்த, போலீஸ்காரர் ஒருவர், பாதி துாரம் சென்ற பின், பேருந்தை தள்ள முடியாமல், பின்புறமாகவே நடந்து சென்ற வீடியோ. 'தள்ளு தள்ளு தள்ளு' என்ற, நகைச்சுவை வசனத்துடன், சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

R S BALA - CHENNAI,இந்தியா
24-மார்-202314:24:13 IST Report Abuse
R S BALA இது போல பேருந்தில் செல்வது ஒரு அலாதியான சுகம்தான்..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
24-மார்-202313:32:10 IST Report Abuse
Tamilnesan ஈயம், பித்தளைக்கு பேரிச்சம் பழம். பேரிச்சம் பழம் எத்தனை கிலோ கிடைத்தது ?
Rate this:
Cancel
Sathyam - mysore,இந்தியா
24-மார்-202311:29:04 IST Report Abuse
Sathyam AS LONG AS TN DRUNKARD LAZY AND GREEDY CITIZENS VOTE FOR BOTH THE DRAVIDIAN PARTIES, THE STATE WOULD REMAIN LIKE THIS AND TN CITIZNES WOULD BE LIKE A FROG IN A WELL.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X