வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வரம்: ஒடிசா சென்றிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.
2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி மாநில கட்சி தலைவர்கள் , பா.ஜ., காங்., அல்லாத வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் டில்லி ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ., காங்., அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சி முதல்வர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஒடிசா சென்றிருந்த திரிணாமுல் காங். தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அம்மாநில பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், முதல்வருமான நவீன்பட்நாயக்கை சந்தித்தார்.மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், இருவரும் தேசிய அரசியல் குறித்து பேசியதாகவும், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்ததாகவும் பிஜூ ஜனதா தள கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.