வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமிர்தசரஸ்: தனக்கு புற்றுநோய் இருப்பதாக கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அவரது மனைவி நவ்ஜோத் கவுர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
1988ல் பாட்டியாலாவில் நடந்த சண்டையில், குர்னாம் சிங் என்பவரை சித்து தாக்கினார். காயமடைந்த சில நாட்களில் மருத்துவமனையில் குர்னாம் சிங் உயிரிழந்தார். சித்து மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 34 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் தொடர்ந்து நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. இதில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்தாண்டு மே மாதம் தீர்ப்பளித்தது.
![]()
|
போலீசாரால் தேடப்பட்ட சித்து , பஞ்சாபின் பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில், நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். பின், பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், சிறையில் உள்ள சித்துவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகவும், இது இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளதாகவும் அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.