நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் புதிதாக களமிறங்கியுள்ள நத்திங் நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து நத்திங் இயர் 1 (Nothing Ear 1)எனும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. அதன்பின் தனது இரண்டாவது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நத்திங் நிறுவனம் தற்போது தனது நத்திங் இயர் 2 (Nothing Ear 2) எனும் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை வருகிற மார்ச் 28 முதல் விற்பனைக்கு வருமென்றும் அறிவித்துள்ளது.
![]()
|
இந்த நத்திங் இயர் 2 மாடலானது முந்தைய மாடலான இயர் 1 இயர்பட்ஸின் அப்டேட் வெர்ஷனாக தெரிகிறது. இதன் வடிவமைப்பு, நத்திங் இயர் 1-ஐ போலவே ஒரு ட்ரான்ஸ்பெரன்ட் டூயல்-சேம்பர் (Transparent Dual-chamber) டிசைன் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நத்திங் இயர் 2-ல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் (Active noise cancellation) உள்ளது. இந்த ஏஎன்சி மூலம் 40dB வரையிலாக பேக்கிரவுண்ட் மற்றும் சுற்றுப்புற இரைச்சல்களை தடுத்து சிறந்த அனுபவத்தை வழங்கும்.
![]()
|
மேலும் நத்திங் எக்ஸ் ஆப்ஸ் வழியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டுக்குமே சப்போர்ட் செய்யும்விதமாக இந்த நத்திங் இயர் 2 ஹெட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விண்டோஸ் 10 டிவைஸ்ளுடன் விரைவாக கனெக்ட் ஆக ஸ்விஃட் பேர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை பெற்றுள்ளன. அதேபோல் இதன் கேஸ் ஐபி55 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
![]()
|
பேட்டரியை பொறுத்தவரை, நத்திங் இயர் 2-ன் ஒவ்வொரு இயர்பட்ஸ்களிலும் 33எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மற்றும் இதன் சார்ஜிங் கேஸில் 485எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. நத்திங் இயர் 2-ன் ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டு இருந்தால், இது சிங்கிள் சார்ஜில் 36 மணிநேர பிளேபேக்கை வழங்கும். அதேபோல் கேமிங்களுக்கு ஏற்றவாறு, லோ லேக் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நத்திங் இயர் 2-ன் இந்திய விலை ரூ.9,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.