வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :சிவசேனா கட்சியின் பார்லி., குழு தலைவர் பதவியிலிருந்து, சஞ்சய் ராவத் நீக்கப்பட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா இரண்டாக பிரிந்தது. மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் சிவசேனாவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அந்த கட்சியின் சின்னமும், ஷிண்டே தரப்புக்கே கிடைத்துள்ளது.
![]()
|
இந்நிலையில், சிவசேனாவின் பார்லிமென்ட் குழு தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே ஆதரவாளரான சஞ்சய் ராவத்தை, அந்த பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே அதிரடியாக நேற்று நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.சஞ்சய் ராவத்துக்கு பதிலாக, கஜானன் கிரிடிகர் சிவசேனாவின் பார்லிமென்ட் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு, ஏக்நாத் ஷிண்டே சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.