பூட்டிக் கிடக்கும் நெல் விற்பனை மையம்
திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில் வேளாண் விற்பனை மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், வேர்க்கடலை மற்றும் பயிறு வகை விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர பயிருக்கு உயிர் உரங்கள், கடப்பாரை, மம்முட்டி, அரிவாள் போன்றவையும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள நாட்களில், காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை வேளாண் விற்பனை மையம் திறந்து விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், கே.ஜி. கண்டிகை வேளாண் விற்பனை நிலையம் தினசரி திறக்கப்படுவதில்லை. மேலும், அங்கு வேளாண் அதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் மொபைல் எண் எதுவும் இல்லாததால் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது.
எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து விற்பனை மையத்தில் வேளாண் அலுவலர் மொபைல் எண், வேலை நேரம் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும்.
- -எஸ்.ஆர்.பாஸ்கர், சாமந்திபுரம்.