திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்ய சுடுகாடு உள்ளது.
இதில், இறந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்த பின் பூஜைகள் செய்வதற்கு போதுமான இட வசதி இல்லை. இதனால் சுடுகாடு அருகே மற்றும் குப்பை நிறைந்த குளக்கரை பகுதியில் இறந்தவர்களுக்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.
எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இறந்தவர்களுக்கு பூஜைகள் போன்ற காரியம் செய்ய பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இறந்தவர்களுக்கு பூஜை செய்ய காரிய இடம் செய்து தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமழிசை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.