கீழச்சேரி:மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரியில் ஊராட்சி.
இப்பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளையடுத்து சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
இதனால் இந்த ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தமேடு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்தான செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நேற்று முன் தினம் நடந்த உலக தண்ணீர் தினம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மற்றும் ஊராட்சி தலைவர் தேவிகலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது.