கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற வாலிபர் கடந்த, 21ல், அவரது மாமனார் சங்கர் மற்றும் சிலரால் குத்தி கொல்லப்பட்டார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, ஜெகனின் மனைவி சரண்யா நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு திருமணமாகி இரு மாதங்கள் கூட நிறைவடையவில்லை; அதற்குள், இப்படி ஆகி விட்டது. நான் திருமணமாகி சென்ற நாள் முதல் என் வீட்டு ஞாபகம் வந்தால் தனிமையில் அழுவேன். அப்போது, என்னை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்ந்து என் கணவரும் அழுவார்.
என்னை ராணி மாதிரி பார்த்துக்கொண்டார். அப்படிப்பட்டவரை கொன்றுவிட்டார்களே; அதற்கு என்னை கொன்றிருக்கலாமே. ஜெகனை மறக்க சொல்லி என் தாய் எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்த போதும் பொறுத்து கொண்டு திருமணம் செய்தேன்.
என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இதில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.