வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து ஏராளமான 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதமர் மோடியை கண்டித்து, ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், போஸ்டர் அச்சடித்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவர் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து, புதுடில்லியின் பல பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டுஇருந்தன. 'ஊழல் கறைபடிந்த சர்வாதிகாரி கெஜ்ரிவாலே வெளியேறு; கெஜ்ரிவாலிட மிருந்து டில்லியை காப்பாற்றுங்கள்' என, அந்த போஸ்டரில் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
![]()
|
இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ''ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இந்த போஸ்டர்களால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.