மேட்டுப்பாளையம்: காரமடை அருகே கல்லுகுழிக்குள் குதித்து, எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அடுத்த,கைக்கோலம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மகன் குமரேசன், 30 எலக்ட்ரீசியன். சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேட்டுப்பாளையம் அருகே குரும்பனூரில் வசிக்கும், மகளின் வீட்டில் சிறிது காலம் தங்க வைக்க, நேற்று காலை மோட்டார் சைக்கிளில், மகன் குமரேசனை ஏற்றிக்கொண்டு குரும்பனூருக்கு வந்து கொண்டிருந்தார்.
காரமடை அடுத்த எத்தப்பன் நகர் அருகே வரும் பொழுது, குமரேசன் இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தும்படி, தந்தையிடம் கூறினார். வண்டியை நிறுத்தியதும் வேகமாகச் ஓடிச் சென்று, அங்கிருந்த கல்லு குழி தண்ணீரில் குமரேசன் குதித்தார். மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் குமரேசனின் உடலை தேடி மீட்டனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.