பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர் பலி: நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்
பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர் பலி: நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்

பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர் பலி: நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்

Updated : மார் 24, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர். இதில் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் 50. அவர் மனைவி விஜயா 39. இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமிகளின் எதிர்காலம் நிலைமை அப்பகுதி மக்களிடம் ஆழ்ந்த கவலையை
Daughters who stand helplessly when their parents die in firecracker explosions  பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர் பலி: நிர்க்கதியாக நிற்கும் பெண் பிள்ளைகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர்.

இதில் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் 50. அவர் மனைவி விஜயா 39. இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தற்போது தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமிகளின் எதிர்காலம் நிலைமை அப்பகுதி மக்களிடம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


latest tamil news


ஆபத்து என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பு தொழில் செய்வதற்கு அவர்களின் வறுமைதான் காரணம்.

தினசரி கூலி வேலை செய்தால்தான் அன்றாடம் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தவர்கள் , நடந்த வெடி விபத்தில் சிக்கி உடல் கருகி பலியாகினர்.

இந்த விபத்து காஞ்சிபுரம் சுற்று பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கங்காதரன் அவரது மனைவி விஜயா பட்டாசு தயாரிப்பு வேலைக்கு சென்றவர்கள் விபத்து ஏற்பட்டு பலியானார்கள்.

அவர்கள் மூத்த மகள் சங்கவி 14. காஞ்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ரூபினி, 12. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

பெற்றோர் இறந்த சோகத்தில் அக்கா, தங்கை இருவரும் ஆழ்ந்த சோகத்தில் காணப்பட்டனர். அவர்கள் எதிர்கால படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடி விபத்தில் இறந்த கங்காதரன், விஜயா ஆகியோரது உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் உடல் துண்டு துண்டாக கிடந்தன.

அவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் நரேந்திரன் கைது செய்யப்பட்டார். மற்றும் பட்டாசு தொழிற்சாலை மேலாளர் மணிகண்டன் 32. என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் வெடி விபத்தில் காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (9)

Sethu Thangavelu - Chennai,இந்தியா
27-மார்-202318:35:14 IST Report Abuse
Sethu Thangavelu அவர்களுக்கு பண எப்படி உதவி செய்யலாம் என்பதை தெரிவித்தால் நலம்.
Rate this:
Cancel
Rajini Murugan - Chennai,இந்தியா
24-மார்-202320:20:40 IST Report Abuse
Rajini Murugan தினமலர் என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-மார்-202320:04:44 IST Report Abuse
Sampath Kumar எத்தனை முறை சொன்னாலும் பாதுகாப்பு விதியை பின்பற்றாத அல்லது அமல் படுத்தாத நிறுவனங்களை என்ன செய்ய முடியும் இறந்த ஆன்மாவுக்காக பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X