லோக்சபாவில் மானியக்கோரிக்கை மசோதா தொடர் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்| Grant Bill in Lok Sabha Passed in the middle | Dinamalar

லோக்சபாவில் மானியக்கோரிக்கை மசோதா தொடர் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (6) | |
பார்லி.,யில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இடையேயான பெரும் அமளி, எட்டாவது நாளாக இரு சபைகளிலும் தொடரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளிடையே நீடித்து வரும் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர, நேற்று மீண்டும் ஒரு சமாதான முயற்சி நடந்தது. துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பார்லி.,யில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இடையேயான பெரும் அமளி, எட்டாவது நாளாக இரு சபைகளிலும் தொடரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.



latest tamil news


பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளிடையே நீடித்து வரும் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர, நேற்று மீண்டும் ஒரு சமாதான முயற்சி நடந்தது.

துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர், தன் அலுவலகத்தில் இரு தரப்பு கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், மூத்த அமைச்சர்கள் பியுஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, அர்ஜுன்ராம் மெஹ்வால், முரளிதரன் மற்றும் மூத்த எம்.பி.,க்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால், இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே, சபை அலுவல்கள் துவங்குவதற்கு முன், சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயர்களால் துாக்கிலிடப்பட்ட தினத்தை நினைவுகூரும் விதமாக, சில நிமிடங்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின், வழக்கம் போல இரு சபைகளிலும் அமளி வெடித்து சபைகள் ஒத்திவைக்கப்பட்டதும், வெளியில் வந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பார்லி., வளாகத்தின் இன்னொரு வாயில் அருகே உள்ள அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக சென்று கோஷங்கள் எழுப்பினர்.

மாலையில் லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர், நிதிமசோதா நிறைவேற்றம் குறித்து கேள்வி எழுப்பினர்.


latest tamil news


அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, ''தற்போது அதுபோல எதுவும் இல்லை,'' என கூறிவிட்டு, துணைநிலை மானிய கோரிக்கை குறித்த அலுவல்களை எடுத்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில், ஒவ்வொன்றாக தாக்கல் செய்யப்பட்டவுடன், இறுதியாக, 2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த அலுவல் முடிந்ததும், உடனடியாக லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது


- நமது டில்லி நிருபர் -.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X