வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தங்க சாலை பேருந்து நிலையம், ஏழு கிணறு பகுதியில் அரசு அச்சகம் உள்ளது. இங்கு, அரசு சம்பந்தப்பட்ட முக்கியஆவணங்கள், தேர்தல் படிவங்கள் உள்ளிட்டவை அச்சடிக்கப்படுகின்றன.
இங்கு நவீன அச்சு இயந்திரம் 1.15 கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கப்பட்டது. மேலும், நான்கு வண்ணங்கள் அச்சடிக்க கூடிய, அச்சு இயந்திரம், 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இவ்விரு அச்சு இயந்திரங்களையும் நேற்று காலை, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.