திருச்சி:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ., சகோதரரிடம், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், 51வயதில், கடந்த 2012ம் ஆண்டு, கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரமேஸ்வரியின் தம்பி 'புல்லட்' ராஜா, 41, அவரது மனைவி கிருஷ்ணவேணி, 36, மற்றும் சிலரிடம், மூன்று வாரங்களுக்கு முன், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் பின்னணி குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கூறியதாவது:
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், புல்லட் ராஜா என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து, இரு கொலைகளை செய்துள்ளார். அந்த இரண்டு கொலைகளிலும், கொலையானவர்களின் கைகள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன.
இது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் இருந்ததால், புல்லட் ராஜாவையும், அவரது மனைவி மற்றும் சிலரை அழைத்து விசாரித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வரும் 29ம் தேதியுடன், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, 11 ஆண்டுகளாகிறது.