வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, சிறப்பு நிறுவனம் உருவாக்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பணிகளை ஏற்கனவே மேற்கொள்ளும், 'டெடா' நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
![]()
|
'டெடா' என்ற தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, 1984ல் துவக்கப்பட்டது.
காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, டெடா மேற்கொள்கிறது.
மேலும், தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பயனாளிகளுக்கு, மத்திய அரசு மானியத்தை பெற்று தரும் பணியையும் செய்தது. தற்போது மத்திய அரசு, பயனாளி வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்துகிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான இந்நிறுவனத்தில் 50 பேர் வரை நிரந்தரமாக பணிபுரிகின்றனர். தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 31 உதவி பொறியாளர்கள், 17 இளநிலை உதவியாளர்கள், சமீபத்தில் மின் வாரியத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், 'வரும் 2030க்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதம் மேல் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு இருக்கும் வகையில், பசுமை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
இதுகுறித்து, நிதித் துறை செயலர் முருகானந்தம் கூறியதாவது:
டெடாவின் வேலை நோக்கம் குறைவாக உள்ளது. அதிக பணியாளர்கள் கூட இல்லை; அதன் செயல்பாடும் குறுகியதாக உள்ளது.
அதேசமயம், பசுமை மின்சாரத்தில், தமிழகம் மிக முக்கிய வளம் நிறைந்த மாநிலமாக உள்ளது. எனவே, அதற்கு தனி கவனம் செலுத்த எரிசக்தி துறையின் கீழ், ஒரு சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. அந்நிறுவனத்துடன், டெடா இணைக்கப்படலாம்; அதுபற்றி எரிசக்தித் துறை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement