முட்டுக்காடு கழிமுக பகுதியை பாதுகாக்க என்ன நடவடிக்கை?

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கழிமுக பகுதியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 'முட்டுக்காடு கழிமுக பகுதியில் குப்பை கொட்டப்படுவதையும், டேங்கர் லாரி வாயிலாக கழிவு நீர் விடப்படுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும்' என,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கழிமுக பகுதியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news


'முட்டுக்காடு கழிமுக பகுதியில் குப்பை கொட்டப்படுவதையும், டேங்கர் லாரி வாயிலாக கழிவு நீர் விடப்படுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும்' என, செங்கல்பட்டை சேர்ந்த மெய்யப்பன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

முட்டுக்காடு கழிமுக பகுதியில், டேங்கர் லாரி வாயிலாக கழிவு நீர் விடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மூன்று மாதங்களாகியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.,11-ல் நடக்கும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-மார்-202306:34:57 IST Report Abuse
அம்பி ஐயர் முதலில் குப்பைகளைக் கொட்டுவோம்..... அதன் பின்னர் மணல் கற்கள் கொட்டி சமப்படுத்துவோம்.... அதன் பின்னர்... நீர்பிடிப்பு பகுதி அல்ல என சான்று கொடுத்து நிலத்தின் வகையினை மாற்றுவோம்..... அப்புறம் நிலத்தை ஆட்டையப் போட்டு பிளாட் போட்டு வித்துடுவோம்,....... இது தானுங்க எசமான் நிலவரம்..... இதுக்கேல்லாம் கொஞ்சம் டைம் ஆகுமுங்க..... அது வரைக்கும் எந்த வித அறிக்கையும் கொடுக்க முடியாதுங்க.....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202305:47:21 IST Report Abuse
Mani . V திமுக கார்களிடம் சொன்னால், அதை எப்படி ஆக்கிரமிப்பு செய்து பாதுகாப்பது என்பது தெரியும்.
Rate this:
24-மார்-202307:20:34 IST Report Abuse
ராஜாஏற்கனவே மாப்பிள்ளை அங்கு லே அவுட் போட்டு விட்டார். நீர் நிலைகளுக்கு அருகில்.இருக்கும் கரைப்புறம்போக்கு இடங்கள் எல்லாம் இப்போது விற்பனையாகிக்கொண்டு உள்ளது. தண்ணீர் வரும் வழியை அடைதோம், நீர் நிலைகளை கபளிகரம் செய்தோம், இப்போதுஏரிக்கரைகளில் உல்லாசமாக வாழ வீடு கட்ட போகின்றோம். இது தான் திராவிட மாடல்... தமிழகமே உனக்கு நீயே செய்துகொண்ட துரோகம் இவர்களை மாற்றி மாற்றி தேர்ந்த்தெடுதது....
Rate this:
seenivasan - singapore,சிங்கப்பூர்
24-மார்-202317:39:53 IST Report Abuse
seenivasanஆம் மொத்த ECR மற்றும் OMR காலி இடங்கள்/நிலங்கள் அனைத்தும் இப்போது மாப்பிள்ளை கையில். நீதிமன்றம் நீண்ட உறக்கத்தில்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X