வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கழிமுக பகுதியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
'முட்டுக்காடு கழிமுக பகுதியில் குப்பை கொட்டப்படுவதையும், டேங்கர் லாரி வாயிலாக கழிவு நீர் விடப்படுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும்' என, செங்கல்பட்டை சேர்ந்த மெய்யப்பன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
முட்டுக்காடு கழிமுக பகுதியில், டேங்கர் லாரி வாயிலாக கழிவு நீர் விடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
![]()
|
இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மூன்று மாதங்களாகியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஏப்.,11-ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement