சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் போகலாம்!| You can go from Chennai to Coimbatore in 6 hours! | Dinamalar

சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் போகலாம்!

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (23) | |
சென்னை : வந்தே பாரத் ரயில் சேவை துவங்குவதால், சென்னை சென்ட்ரல் - கோவைக்கு ஆறு மணி நேரத்தில் செல்ல முடியும். மற்ற ரயில்களை ஒப்பிடுகையில், பயண நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது.சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை, 10 வழித்தடங்களில், இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அடுத்ததாக, 11வது வந்தே பாரத்
You can go from Chennai to Coimbatore in 6 hours!  சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் போகலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : வந்தே பாரத் ரயில் சேவை துவங்குவதால், சென்னை சென்ட்ரல் - கோவைக்கு ஆறு மணி நேரத்தில் செல்ல முடியும். மற்ற ரயில்களை ஒப்பிடுகையில், பயண நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது.


சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை, 10 வழித்தடங்களில், இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


அடுத்ததாக, 11வது வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, அடுத்த மாதம், 8ம் தேதி துவங்கி வைக்க உள்ளார். இதற்கான உத்தேச கால அட்டவணை, நேற்று வெளியானது.


கோவையில் இருந்து புதன் தவிர, மற்ற நாட்களில் தினமும் காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, மதியம், 12:10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்


சென்னையில் இருந்து மதியம், 2:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கோவை செல்லும். மொத்தம் உள்ள, 495 கி.மீ., துாரத்தை, 6:10 மணி நேரத்தில் செல்கிறது.


திருப்பூர், ஈரோடு, சேலத்தில் மட்டுமே நின்று செல்லும். அதிகபட்சமாக மணிக்கு, 80.31 கி.மீ., வேகத்தில் செல்லும். தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


latest tamil news

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் - கோவை இடையே, புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம், கால அட்டவணை உள்ளிட்ட விபரங்களை விரைவில் அறிவிப்போம். இந்த ரயில் சேவை துவங்கும்போதும், சென்ட்ரல் - கோவைக்கு ஆறு மணி நேரத்தில் செல்ல முடியும்.


இந்த தடத்தில் ஏற்கனவே செல்லும் மற்ற ரயில்களை ஒப்பிடுகையில், ஒரு மணிநேரம் பயண நேர குறையும். ஆரம்பத்தில் மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். படிப்படியாக வேகம் அதிகரிக்கும்போது, பயண நேரத்தையும், மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


பயணம் நேரம் எவ்வளவு?


கோவை விரைவு ரயில் - 7:55 மணி நேரம்

சேரன் விரைவு ரயில் - 8:00 மணி நேரம்

நீலகிரி விரைவு ரயில் - 8.05 மணி நேரம்

கோவை இன்டர்சிட்டி - 7:45 மணி நேரம்

கோவை சதாப்தி - 7.05 மணி நேரம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X