'தைராய்டு சுரப்பியை தாண்டி பரவியிருக்கும் புற்றுநோயை அயோடின் சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம்' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, தைராய்டு புற்றுநோய் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ளது. உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோன் (டி3, டி4) இங்கு சுரக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்படுவதை, தைராய்டு அதிகமாக வேலை செய்வது, வேலை செய்யாமல் போவது மற்றும் புற்றுநோய்கட்டி என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
தைராய்டு சுரப்பியில், கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற்று, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை வாயிலாக, அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய வேண்டும்.
புற்றுநோய் கட்டியாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்ற வேண்டும்.
அறுவை சிகிச்சை முடிந்தபின், கழுத்தில் மீதம் இருக்கும் தைராய்டு அணுக்களில் வேறு எங்காவது புற்றுநோய் பரவியுள்ளதா என கண்டறிய நியூக்ளியர் அயோடின் 131 ஸ்கேன் எடுக்க வேண்டும்.தைராய்டு சுரப்பியை தாண்டி பரவியிருக்கும் புற்றுநோயை இந்த அயோடின் சிகிச்சை வாயிலாக அழிக்கலாம். இதற்கு ஓரிரு நாட்கள் தனிப்பிரிவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்குப்பின், வீட்டில் ஒருவாரம் தனியறையில் இருக்க வேண்டும். சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணிகள் அருகில் செல்லக்கூடாது.
அதன்பின் இயல்பாக இருக்கலாம்; உடன் இருப்போருக்கு பாதிப்பு ஏற்படாது.சிகிச்சைக்குப்பின், வாழ்நாள் முழுவதும் காலையில் தைராய்டு மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தைராய்டு புற்றுநோயை எளிதாக குணப்படுத்தலாம்.
இதற்கான அறுவை சிகிச்சை மற்றும் அயோடின் 131 சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதியும் கே.எம்.சி.எச்.,ல் உள்ளது.
தைராய்டு புற்றுநோய் பரிசோதனை ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கும், கூடுதல் விவரங்களுக்கும் 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.