ராகுல் எம்.பி., பதவியை பறியுங்கள்: வக்கீல் மனு; அடுத்தது என்ன காங்., முக்கிய ஆலோசனை| Rahul MP, grab the post: Advocate ; Whats next Cong., key advice | Dinamalar

ராகுல் எம்.பி., பதவியை பறியுங்கள்: வக்கீல் மனு; அடுத்தது என்ன காங்., முக்கிய ஆலோசனை

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (37) | |
புதுடில்லி: 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று இருப்பதால் காங்., எம்பி. ராகுலின் பதவியை பறிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வக்கீல், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார்.வக்கீல் வினித் ஜிண்டால் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று இருப்பதால் காங்., எம்பி. ராகுலின் பதவியை பறிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வக்கீல், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார்.

வக்கீல் வினித் ஜிண்டால் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



latest tamil news

எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின்படி, ராகுல் காந்தியை எம்.பி. பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இன்றே அறிவிக்க முடியும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இது போல் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானியும் இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


வயனாடுக்கு இடைதேர்தலா ?


ராகுல் கேரள மாநிலம் வயனாடு தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். உபி.,யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகி ஆசாம்கான் என்பவரது மகன் தண்டனை பெற்றதும் அவரது எம்எல்ஏ., பதவி பறிபோனது.


எம்பி பதவியை தக்கவைக்க வழி ஏதும் இருக்கிறதா என கலந்து ஆலோசிக்க காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இன்று மாலை கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X