சென்னை: பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பா.ஜ., நிர்வாகி
இந்த நிலையில், ரூ.2,348 கோடி மோசடி வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பா.ஜ., விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.