வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய 5 டிப்ஸ்

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | |
Advertisement
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது அனைவரும் எண்ணம். வாழ்வின் உந்துசக்தியே மகிழ்ச்சி தான். அதற்காக தான் கல்வி, உழைப்பு, திறன், பணம் போன்றவை உதவுகின்றன. மனநிறைவு, திருப்தி போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நேர்மறையான உணர்ச்சி நிலை தான் மகிழ்ச்சி. ஒருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றால் மகிழ்ச்சியின் அளவுகோல் மாறுபடும்.
5 tips to follow to live a happy life  வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய 5 டிப்ஸ்

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது அனைவரும் எண்ணம். வாழ்வின் உந்துசக்தியே மகிழ்ச்சி தான். அதற்காக தான் கல்வி, உழைப்பு, திறன், பணம் போன்றவை உதவுகின்றன.

மனநிறைவு, திருப்தி போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நேர்மறையான உணர்ச்சி நிலை தான் மகிழ்ச்சி. ஒருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றால் மகிழ்ச்சியின் அளவுகோல் மாறுபடும். ஒருவருக்கு இட்லி உணவே மகிழ்ச்சியை தரும். ஒருவருக்கு பிரியாணியில் தான் ஆனந்தம் இருக்கும். ஒருவருக்கு 500 நூறு ரூபாய் கிடைத்தாலே மகிழ்ச்சி பொங்கும். மற்றொருவருக்கு 50,000 ரூபாயில் தான் மகிழ்ச்சி இருக்கும்.

மனிதர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அம்சமாக மகிழ்ச்சி உள்ளது. எனவே அது ஒவ்வொருவருக்கும் தேவை. நாம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது, ​​நமது மூளை டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்களை வெளியிடுகிறது. இது தான் மகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வுகளுக்கு காரணம். நிறைவான வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அவசியம். அந்த மகிழ்ச்சியை அடைவதற்கான எளிய 5 குறிப்புகளை பார்ப்போம்.


நன்றிவுணர்வு பழகுவோம்


வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்திருப்பவற்றை எண்ணி நன்றிவுணர்வோடு இருங்கள். சுமைதாங்கி படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பிரபலமான பாடல் வரி ஒன்று உண்டு. கவிஞர் வாலியே இந்த பாடல் தான் தன்னை திரைத்துறையில் ஓடாமல் நின்று போராட வைத்து வெற்றியாளனாக்கியது என கூறியிருக்கிறார். அந்த வரி, “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்பது தான் அது.

எனவே தினம் தினம் கிடைக்கும் சிறிய விஷயங்களுக்கு கூட நன்றிவுணர்வை வெளிப்படுத்த வேண்டும். ஒரு நல்ல காபி கிடைத்தால், எதிர்பார்க்கும் போது மழை பெய்தால், முகம் தெரியாதவர் நம்மை பார்த்து புன்னகையுடன் கடந்து சென்றால், சென்று நின்றவுடன் மெட்ரோ வந்தால், ஓலா டிரைவர் எக்ஸ்ட்ரா கேட்காமல் இருந்தால் இப்படி நடக்கும் சிறிய விஷயங்களைக் கூட நன்றிவுணர்வோடு நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.


விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்


latest tamil news

படிப்பது, சமைப்பது, ஓவியம் வரைவது அல்லது அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது என உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் என்ஜாய் செய்யும் செயல்களில் ஈடுபடுவது, நீங்கள் இன்னும் நிறைவாக உணரவும், உங்கள் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.


மற்றவர்களுடன் இணைந்திருங்கள்


குடும்பத்தினர் மற்றும் அண்டை அயலாருடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் மகிழ்ச்சியின் முக்கிய அம்சம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைய நேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி அழைப்பு, சாட்டிங் அல்லது நேரில் சந்திப்பது என எதன் வழியாகவேனும் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


நிகழ்காலத்தில் முழுமையாக இருங்கள்


latest tamil news

இதனை மைண்ட்புல்னெஸ் என்பார்கள். நிகழ்கால தருணங்களில் முழுமையாக இருப்பது தான் அது. எதிர்காலம், கடந்த காலம் பற்றிய கவனச் சிதறல் இன்றி தற்போதைய தருணத்தில் கவனத்தை செலுத்தி அதில் ஈடுபடுவது மகிழ்ச்சியைத் தரும். இதனை வழக்கமாக்கிக் கொண்டால் மன அழுத்தம், பதற்றத்தை குறைக்கும். மனத் தெளிவை அளிக்கும்.


உடல்நலனில் கவனம்


A Sound mind in a sound body என்பது கிரேக்க தத்துவ ஞானி தாலஸின் கூற்று. அதாவது ஆரோக்கியமான வலுவான உடலில் தான் அற்புதமான மனம் உள்ளது என்பது பொருள். மனம் மகிழ்ச்சியாக இருக்க, உடல் பிரச்னை செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உடற் பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். போதுமான தூக்கம் அவசியம். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இவை ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X