வெள்ளி முதல் வியாழன் வரை (24.3.2023 - 30.3.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்
சுக்கிரன், செவ்வாய், சனி நன்மைகளை வழங்குவர். முருகன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
அசுவினி: வெள்ளி, சனிக்கிழமையில் உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஞாயிறு முதல் நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: உங்கள் நட்சத்திர நாதனும் ராசிநாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழிலில் லாபம், உத்தியோகத்தில் நன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்
கார்த்திகை 1ம் பாதம்: எதிர்ப்புகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் நன்மைகள் அதிகரிக்கும். லாப நிலை உருவாகும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
கேது, குரு, சூரியன், புதன் நன்மைகள் வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு நன்மையளிக்கும்.

கார்த்திகை 2, 3, 4: சனிக்கிழமை வரை செலவுகள் அதிகரிக்கும். ஞாயிறு முதல் எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பொருளாதார நிலைமை சீராகும்.
ரோகிணி: வெள்ளி, சனிக்கிழமையில் உங்கள் செயல்களில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அதன்பின் நிலைமை சீராகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும்.
மிருகசீரிடம் 1, 2: வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதன்பின் மனம் மகிழும்படியான நிலை உண்டாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். புதிய முயற்சிகள் நன்மையாக முடியும். ஆதாயம் காண்பீர்கள்.
மிதுனம்
சனி, சூரியன், புதன், சுக்கிரன், ராகு நன்மை வழங்குவர். பெருமாளை வழிபட எண்ணியது நிறைவேறும்.
மிருகசீரிடம் 3, 4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எண்ணங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வெள்ளி சனிக்கிழமையில் செலவுகளில் கவனம் தேவை.
திருவாதிரை: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும், வியாபாரத்தில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஞாயிறு, திங்களில் வீண் அலைச்சல், செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும். ஞாயிறு, திங்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
கடகம்
குரு நன்மைகளை வழங்குவார். சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
புனர்பூசம் 4: விருப்பங்கள் எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். செயல்கள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.
பூசம்: நன்மை அடைய வேண்டிய வாரம். வருமானம் அதிகரிக்கும். மனம் மகிழும்படியான சம்பவம் நடக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர்கள். புதன், வியாழனில் திடீர் செலவு ஏற்படும்.
ஆயில்யம்: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும் ஆதாயம் உண்டாகும். பாக்கிய குருவால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சி வெற்றி பெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
சிம்மம்
கேது, புதன், சுக்கிரன், செவ்வாய் நன்மை வழங்குவர். சூரிய வழிபாடு நலம் தரும்.

மகம்: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் வாரம். கடந்த வாரம் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும், தொழில், உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
பூரம்: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். மூன்றாமிட கேது உங்கள் முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார். வெள்ளி, சனிக்கிழமையில் எதிர்பார்த்த வருமானம் வரும். ஞாயிறு, திங்களில் புதிய முயற்சி வெற்றியாகும்.
உத்திரம் 1: அரசு வழியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
கன்னி
சனி, குரு, சுக்கிரன் நன்மைகள் வழங்குவார்கள். நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.
உத்திரம் 2, 3, 4: வெள்ளியன்று புதிய முயற்சிகள் வேண்டாம். வார்த்தைகளில் நிதானத்தைக் கடை பிடியுங்கள். சனிக்கிழமை முதல் நிலைமை சீராகும். நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் நடந்தேறும்
அஸ்தம்: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்கள் தோன்றும். அதன்பின் தடைகள் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சித்திரை 1, 2: குரு அருளால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும் என்றாலும் சனிக்கிழமை, ஞாயிறன்று தடைகளை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
23.3.2023 மாலை 4:17 மணி - 25.3.2023 இரவு 10:29 மணி
துலாம்
சூரியன், புதன் நன்மையை வழங்குவர். விநாயகரை வழிபட சங்கடம் தீரும்.
சித்திரை 3, 4: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை என்றாலும் சூரிய பலத்தால் தேவைகள் நிறைவேறும். தடைபட்ட வேலைகள் நடைபெறத் தொடங்கும். ஞாயிறன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை.
சுவாதி: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் உங்கள் செயல்களில் லாபம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். விருப்பம் நிறைவேறும். உழைப்பிற்கேற்ற வெற்றியை அடைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஞாயிறு, திங்களன்று விழிப்புடன் செயல்படவும்.
விசாகம் 1, 2, 3: லாபாதிபதி சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். சூழலுக்கேற்ப திறமையுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும், வருமானம் அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். ஞாயிறு, திங்களன்று பிரச்னையை எதிர்கொள்வீர்கள்.
25.3.2023 இரவு 10:30 மணி - 28.3.2023 காலை 7:09 மணி
விருச்சிகம்
குரு, ராகு நன்மைகள் வழங்குவர். மாரியம்மனை வழிபட நன்மை உண்டாகும்.
விசாகம் 4: குரு, ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் விருப்பங்கள் நிறைவேறும். நினைத்ததை அடைவீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் அனுகூலமாகும். திங்கள், செவ்வாயில் செயல்களில் கவனம் தேவை.
அனுஷம்: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் நன்மை உண்டாகும். குடும்பத்தின் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வரவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதனன்று சில சங்கடங்கள் தோன்றும்.
கேட்டை: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வருமானம் கூடும். உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்டிருந்த செயல்கள் உங்கள் விருப்பப்படி நடந்தேறும். வழக்கு சாதகமாகும். வியாழனன்று எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.
28.3.2023 காலை 7:10 மணி - 30.3.2023 மாலை 6:01 மணி
தனுசு
சனி, சுக்கிரன், கேது, நன்மை வழங்குவர். சிவனை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: உங்களுக்கு சாதகமான வாரம் இது. சந்திர பலத்தால் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூராடம்: மூன்றாமிட சனியும், ஐந்தாமிட சுக்கிரனும், லாபஸ்தான கேதுவும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். சந்திர பலம் உங்கள் செல்வாக்கை அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.
உத்திராடம் 1: நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். வருமானத்திற்குரிய வழிகள் உண்டாகும். வேலை வாய்ப்பிற்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
30.3.2023 மாலை 6:02 மணி - 2.4.2023 அதிகாலை 5:44 மணி
மகரம்
சூரியன், சுக்கிரன், செவ்வாய் நன்மை வழங்குவர். அனுமனை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சூரியனும் செவ்வாயும் சங்கடம் தீர்ப்பர். முயற்சிக்கேற்ப நன்மை அடைவீர்கள். குடும்பம், உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை.
திருவோணம்: சூரிய பலத்தால் முயற்சிகள் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2: பாதச்சனியின் காரணமாக செயல்களில் கவனம் தேவை. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ஆறாமிட செவ்வாயால் உங்கள் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்
குரு, ராகு, சுக்கிரன் நன்மை வழங்குவார்கள். வராகி வழிபாடு சங்கடம் போக்கும்.
அவிட்டம் 3, 4: சந்திர பலத்தால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நினைத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும்.
சதயம்: நன்மைகள் அதிகரிக்கும் வாரம். குடும்பத்தினர் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள். தடைபட்ட செயல்களை முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்கள். அந்நியர் உதவியால் செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்கள் ஆற்றல் வெளிப்படும் வாரம். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்ப்பு விலகும். அரசுவழியில் ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு பதவி உயர்வு ஏற்படும்.
மீனம்
சுக்கிரன் நன்மையை வழங்குவார். குலதெய்வத்தை வழிபட வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. வெள்ளி, சனிக்கிழமையில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகள் நிறைவேறும். அதன்பின் உங்கள் முயற்சிக்கேற்ப அனுகூலம் காண்பீர்கள்.
உத்திரட்டாதி: வெள்ளி சனிக்கிழமையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். நிதிநிலை சீராகும். விரைய சனியால் செலவுகள் அதிகரிக்கும். யோசித்து செயல்படுங்கள். தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் வரவுகளுக்கு வழிகாட்டுவார்.
ரேவதி: உங்கள் முயற்சியால் நினைத்ததை அடைவீர்கள் என்றாலும் இரண்டாமிட ராகுவால் பேச்சால் பிரச்னை, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். விரயச் சனியும், சுகஸ்தான செவ்வாயும், எட்டாமிட கேதுவும் உடல் நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தலாம் கவனம்.