சென்னை: திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது உடல் இன்று பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அஜித்தின் தந்தை மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர், அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அவருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!. இவ்வாறு அதில் தெரிவித்தார்.