பிஎம்டபுள்யூ நிறுவனம் தனது மிகவும் பிரபலமான ஆர்18 சீரிஸில், ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் (BMW R18 Transcontinental) எனும் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
லக்ஸுரி தயாரிப்புகளுக்கு பெயர்போன நிறுவனமான பிஎம்டபுள்யூ, இந்திய சந்தையில் ஏராளமான ப்ரீமியம் ரக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை குறைந்த விலையில் ஜி310ஆர், ஜி310 ஜிஎஸ் போன்ற பைக்குகளை அறிமுகம் செய்து வந்த பிஎம்டபுள்யூ நிறுவனம், தற்போது தனது புகழ்பெற்ற ஆர்18 சீரிஸில், ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் (R18 Transcontinental) எனும் லக்சரி க்ரூஸர் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
![]()
|
இந்த சீரிஸில் ஆர்18, ஆர்18 கிளாசிக் மற்றும் புதிய ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் என மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த புதிய ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் சிபியூ முறையில், அதாவது முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இதன் காரணமாகவே இந்த பைக் சற்று விலைமிக்கவைகளாக இருக்கிறது.
![]()
|
தோற்றம், ஸ்டைலிங்கை பொறுத்தவரை, இந்த லக்சரி மோட்டார்சைக்கிள் ஹேண்டில்பாரில் பெரிய விண்ட் டிஃப்லெக்டர்ஸ், இரு வட்ட வடிவிலான கண்ணாடிகள், பில்லன் இருக்கை, எடை குறைவான அலாய்கள், மற்றும் மத்தியில் பொருத்தப்பட்ட ஃபுட் பெக்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. அதுபோக, மற்ற ஆர்18 பைக்குகளில் வழங்கப்படுவதை போல நீர்த்துளி வடிவில் பெட்ரோல் டேங்க்களும், ரைடரின் இருக்கை பொசிஷன் நிமிர்ந்ததாகவும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் நிக்கல்-பிளேட்டட் டிரைவ்ஷாஃப்ட் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
![]()
|
அதோடு, இந்த புதிய ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் பைக்கில் மழை, ரோல் மற்றும் ராக் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன. இவற்றை பைக்கின் 10.25-இன்ச் டிஎஃப்டி வண்ண திரையின் வாயிலாக ரைடர் தேர்வு செய்ய முடியும். இதுதவிர டிராக்ஷன் கன்ட்ரோ, ஆட்டோமேட்டிக் ஸ்டாபிளிட்டி கன்ட்ரோல், உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
![]()
|
செயல்திறனை பொறுத்தவரை, 1,802சிசி ஏர்/ஆயில்-கூல்டு, 2-சிலிண்டர் இரட்டை என்ஜின் 2023 ஆர்18 டிரான்ஸ் கான்டினென்டல் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,750 ஆர்பிஎம்-ல் 90 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்-ல் 158 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இத்துடன் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கூடுதல் அம்சமாக ரிவர்ஸ் கியரும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், கருப்பு ஸ்ட்ரோம் மெட்டாலிக், கிராவிட்டி நீலம் மெட்டாலிக், மன்ஹட்டான் மெட்டாலிக் மேட், 719 மினரல் வெள்ளை மெட்டாலிக் மற்றும் 719 கேலக்ஸி டஸ்ட் மெட்டாலிக்/ டைடன் சில்வர் 2 மெட்டாலிக் என 5 விதமான பெயின்ட் தேர்வுகளில் இந்த புதிய ஆர்18 டிரான்ஸ் காண்டினெண்டல் பைக்கை பெறலாம். இந்தியாவில் இதன் விலை ரூ.31.50 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயித்துள்ளனர்.