பல்வேறு சட்ட திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா 2023ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடத்தக்கது எப் & ஓ வர்த்தகத்தில் விதிக்கப்படும் எஸ்.டி.டி., எனும் பங்கு பரிவர்த்தனை வரியை 25% உயர்த்தியுள்ளது.
பட்ஜெட்டிற்கு பிறகு பார்லியில் இன்று நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையில் குழுமியிருந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். சிலர் அதானி மோடி பாய் என கோஷம் எழுப்பினர். அமளிக்கு இடையே விவாதமின்றி மக்களவையில் நிதி மசோதா ஏற்கப்பட்டது.
இந்த நிதி மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது எஸ்.டி.டி., உயர்வு. பங்கு வர்த்தகத்தில் எப்&ஓ எனும் பிரிவு உள்ளது. இதில் ஆப்ஷன் விற்பனைக்கான எஸ்.டி.டி., எனும் வரி 23.52% உயர்த்தப்பட்டுள்ளது. ப்யூச்சர் கான்ட்ராக்ட் விற்பனைக்கான பரிவர்த்தனை வரி 25% உயர்த்தப்பட்டுள்ளது.
![]()
|
எஸ்.டி.டி., எனும் பங்கு பரிவர்த்தனை வரி 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பங்குகள் வாங்கும் போது, விற்கும் போது மொத்த தொகைக்கு விதிக்கப்படும் ஒருவகையான டர்ன்ஓவர் வரி இது. பங்குச் சந்தையில் உள்ள எந்தவொரு பரிவர்த்தனைக்கும் இந்த வரி பொருந்தும். மியூச்சுவல் பண்ட் பரிவர்த்தனையிலும் இந்த வரி உண்டு. நீண்ட கால முதலீட்டிற்கு இந்த வரியையும், மூலதன ஆதாய வரியையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் பட்ஜெட்டில் அது பற்றிய அறிவிப்பு வரவில்லை.