வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் சிங்க் (sync) செய்யும் விதமாக புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.
சமீபகாலமாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் அப்டேட்டை வழங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புக்கான அம்சத்தையும் அவ்வபோது வழங்கி வருகிறது. அதன்படி, ஒருசில தினங்களுக்கு முன்னர் க்ரூப் அட்மின்களுக்கான அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் சிங்க் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.
![]()
|
அதாவது, உங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட்டை இனி ஒரே நேரத்தில் 4 சாதனங்கள் வரை சிங்க் (Sync) செய்து இயக்க முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த அம்சம் பாதுகாப்பானதா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இருப்பினும் விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான தளத்திற்காக பிரத்யேகமாக புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப்-ல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த துவங்கலாம். இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
![]()
|
மேலும், "சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்," என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
![]()
|
உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் முதன்மை சாதனத்தில் WhatsApp ஐத் திறக்கவும். செட்டிங்ஸ் (Settings) சென்று, Linked Devices என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Link a New Device என்பதை கிளிக் செய்தால் டிஸ்பிளேயில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
விண்டோஸ் டெஸ்க்டாப்பில் உள்ள இரண்டாவது சாதனத்தை இணைக்க, உங்கள் பிரௌசரில் web.whatsapp.com என்ற இணையப் பக்கத்தைத் திறக்கவும்.
![]()
|
உங்கள் இரண்டாவது சாதனம் மூலம் இணையப் பக்கத்தில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்யவும்.
இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லிங்க் செய்ய முடியும்.
இந்த வழிமுறைகள் மூலம் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும்.