வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்கேயம்: காங்கேயம் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பட்ஜெட்டில் சொல்வதற்கும் அரசாங்கம் செயல்படுத்துவதற்கும் எந்தவிதமான உண்மையும் இல்லை. பெயருக்கு பட்ஜெட் வாசிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டுறவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் இந்த வருடம் கூட்டுறவுக்கு எதுவும் நிதி ஒதுக்கவில்லை. மொத்தத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.
பிரசாரத்தில் ராகுல், நிரவ் மோடியை திட்ட வேண்டும் என்பதற்காக மோடி எனும் சமுதாயத்தினர் எல்லாம் பிராடு என பேசினால் அந்த சமுதாயத்தில் இருந்த ஒரு பெரியவர் அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.
இது பா.ஜ., அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, குஜராத் அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, பா.ஜ., நபர்கள் போட்ட வழக்கு அல்ல, மோடி என்ற சமுதாயத்தை இழிவு படுத்தியதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் போட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனை கொடுத்துள்ளது.
இதில் பா.ஜ.,விற்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அப்படி கெட்டார் ராகுல். இவ்விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.