கூகுள் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான கிட்டி ஓ'நெய்ல்-க்கு இன்று டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 1946 ல் பிறந்தவர் கிட்டி. இவர் செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளியாவார். இவரது 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம், மியா திஜான் என்கிற செவித்திறன் அற்ற ஓவியக் கலைஞரை வைத்து கிட்டியின் புகைப்படத்தை வரைந்து டூடுல் வெளியிட்டுள்ளது. இவருடைய தாய் அமெரிக்காவின் கரோக்கி இனத்தைச் சார்ந்தவர். தந்தை கார்பஸ் கிறிஸ்டி, ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக செவிக்கோளாறு இவரை ஆட்கொண்டது. ஆனால் சாதிப்பதற்கு இவர் இதனை என்றுமே தடையாக நினைத்ததில்லை. மோட்டார் சைக்கிள் பந்தயம், நீர்வழி நிகழ்த்தும் சாகசங்கள் போன்ற பல விளையாட்டுகளையும் விளையாடினார்.
![]()
|
ஓரிகான் மாகாணத்தில் மணிக்கு 76 மைல் கடந்து இவர் நிகழ்த்திய கார்பந்தய சாதனை வரவேற்பு பெற்றது. இதன்மூலம் உலகின் 'மிகவிரைவான கார் ஓட்டும் பெண்மணி' என்கிற பெயரைப் பெற்றார். பெண்களுக்காக கொடுக்கப்பட்ட சாதனை வரம்புகளை முறியடித்தார். தி ப்ளூ பிரதர்ஸ், தி பயானிக் வுமன், வண்டர் வுமன் போன்ற திரைப்படங்களில் சாகசங்கள் பல மேற்கொண்டுள்ளார். ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சிக் கூட்டமைப்பில் சேர்ந்த முதல் பெண்மணி இவரே. 1979 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை வரலாறு 'சைலன்ட் விக்டரி' என்ற பெயரில் படமாக திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ல் தனது 72 வது வயதில் கிட்டி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.