வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தூத்துக்குடி: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, வெளியே வர தயாராகிவிட்டது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த கிளி, தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகிவிட்டது. கிளி பறப்பதற்கு சக்தி தயாராக உள்ளது. பா.ஜ.,வால் பறக்க முடியும், பா.ஜ., ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.

பா.ஜ.,வினர் கூனிகுறுகி ஓட்டு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி வாக்காளர்களிடம் ஓட்டு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரசை விட பா.ஜ., 45 சதவீதம் அதிகமாகவே செய்துள்ளது. மீனவர்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்தது காங்கிரசும், திமுக.,வும் தான். இவ்வாறு அவர் பேசினார்.