வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்கம் சென்றிருந்த கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
ஒடிசா சென்றிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா பிஜூ ஜனதா தளகட்சி தலைவரும், முதல்வருமான நவீன்பட்நாயக்கை சந்தித்தார். 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாக இந்த சந்திப்பு பேசப்பட்டது.
![]()
|
இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, மேற்குவங்கம் சென்றார்.
கோல்கட்டாவில் முதல்வர் மம்தாபானர்ஜியை சந்தித்து பேசினார்.இருவரும் தேசிய அரசியல் குறித்து பேசியதாகவும், குறிப்பாக 2024 லோக்சபா தேர்தல் குறித்தும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு, மத்திய அரசின் செயல்பாடு தான் என நாட்டுக்கே தெரியுமே. ராகுல் தகுதி நீக்கம் குறித்து ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.