வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆத்தூர்:விசாரணைக்கு அழைத்து வந்த பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ், ஆத்துார் மகளிர் ஸ்டேஷனில் இருந்து தப்பி ஓடினார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி. இச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததில், 8 மாத கர்ப்பமாக உள்ளார். அவரது புகாரில், ஆத்தூர் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆத்தூர் மகளிர் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வந்த, ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், 30, என்பவர், அங்கிருந்து, பைக் மூலமாக, நண்பருடன் தப்பியோடியுள்ளார்.அந்த போலீசாரை பின் தொடர்ந்து, ஆத்தூர் மகளிர் போலீசார் விரட்டிச் சென்றும் பிடிபடவில்லை. தொடர்ந்து, ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான டவுன் மற்றும் ஊரக ஸ்டேஷன் போலீசார், வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.