வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துாத்துக்குடி :ராகுல் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது சட்டப்படியான நடவடிக்கை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது குறித்து துாத்துக்குடியில் அண்ணாமலை கூறுகையில், சூரத் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம். 30 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்ய கோர்ட் வாய்ப்பு அளித்துள்ளது. தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். ராகுல் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை.