மீண்டும் வருகிறது.. 90ஸ் கிட்ஸ்-ன் கவர்ச்சி நாயகன் ஹீரோ கரிஸ்மா!

Updated : மார் 24, 2023 | Added : மார் 24, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
ஹீரோ மோட்டோகார்ப், அதன் புகழ்பெற்ற கரிஸ்மா (Hero Honda Karizma)பைக்கை மீண்டும் சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றது. ஹீரோ கரிஸ்மா என்றாலே யாருக்கு தெரியுமோ இல்லயோ..90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.. 2003ம் ஆண்டு முதல் சாலைகளை ஆட்சி செய்த கரிஸ்மா பைக் ஒவ்வொரு 90ஸ் கிட்ஸ்களின் கனவு பைக்காகவே இருந்து வந்தது. அதுவும் டிவியில் இதற்கான விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக்
New Hero Karizma to be launched this year; gets 210cc liquid-cooled engineமீண்டும் வருகிறது.. 90ஸ் கிட்ஸ்-ன் கவர்ச்சி நாயகன் ஹீரோ கரிஸ்மா!

ஹீரோ மோட்டோகார்ப், அதன் புகழ்பெற்ற கரிஸ்மா (Hero Honda Karizma)பைக்கை மீண்டும் சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றது.ஹீரோ கரிஸ்மா என்றாலே யாருக்கு தெரியுமோ இல்லயோ..90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.. 2003ம் ஆண்டு முதல் சாலைகளை ஆட்சி செய்த கரிஸ்மா பைக் ஒவ்வொரு 90ஸ் கிட்ஸ்களின் கனவு பைக்காகவே இருந்து வந்தது. அதுவும் டிவியில் இதற்கான விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் இந்த கரிஸ்மா பைக்கில் சாகசம் செய்வது போல் தோன்றியிருப்பார். இதைப் பார்த்தே அப்போதைய இளசுகள் குஷியாகிவிடுவர். அந்த அளவிற்கு ஹீரோ நிறுவனத்தின் கரிஸ்மா தாக்கத்தை ஏற்படுத்திருந்தது என்றே சொல்லலாம்.


latest tamil news


நாளிடைவில் இந்த ஹீரோ கரிஸ்மாவில் கரிஸ்மா.ஆர் (Karizma R), கரிஸ்மா எசட்.எம்.ஆர் (Karizma ZMR), கரிஸ்மா எசட்.எம்.ஆர் வி2(Karizma ZMR V2)பல்வேறு வேரியண்ட்கள் வரத்தொடங்கின. அதன்பின் பல்வேறு காரணங்களால் கரிஸ்மாவின் கடைசி மாடலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஹீரோ நிறுவனம் புகழ்பெற்ற கரிஸ்மா பைக்கை மீண்டும் சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றது.latest tamil news


இந்த புதிய கரிஸ்மா மாடலை பஜாஜ் பல்சர் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 210 சிசி பிரிவில் இந்த புதிய கரிஸ்மா விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. கரிஸ்மாவின் புதிய தோற்றத்திற்காக புதிய பிளாட்பாரம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் ஸ்டைல் ஹ்ரித்திக் ரோஷன் உட்பட பல்வேறு திரை பிரபலங்களுக்கு மிகவும் ஃபேவரிட்டான ஒன்றாகும்.
latest tamil news


எல்இடி லைட், ப்ளூடூத், நேவிகேஷன் பற்றிய தகவலை வழங்கும் வசதி, எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதியுடன் கூடிய சைடு ஸ்டாண்டு சென்சார் போன்ற அட்டகாசமான அம்சங்களும் புதிய ஹீரோ கரிஸ்மா பைக்கில் இடம்பெற இருக்கிறது. அதோடு பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளும் கரிஸ்மாவில் வழங்கப்பட உள்ளன. ரைடு-பை-ஒயர், யுஎஸ்டி ஃபோர்க்குகள், ஸ்லிப்பர் க்ளட்ச அம்சம், டிஸ்க் பிரேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

Bhakt - Chennai,இந்தியா
25-மார்-202300:19:35 IST Report Abuse
Bhakt வேஸ்ட் பைக் always
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X