வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்., எம்.பி.ராகுல் இதுவரை 7 கிரிமினல் வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ளார். இவை அனைத்துமே கிரிமினல் வழக்குகள் என தகவல் வெளியாகியுள்ளது.
திருடர்களுடன் மோடி என்னும் சமுதாய பெயரை ஒப்பிட்டு பேசியதாக தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், காங்.,எம்.பி., ராகுலை குற்றவாளியாக அறிவித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. உடனே ஜாமின் வழங்கியுள்ள நீதிமன்றம், மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு தரும் வகையில், தண்டனையை தற்காலிகமாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
![]()
|
இன்று ராகுல் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக லோக்சபா செயலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியது, நேஷனல் ஹெரால்டு உள்பட நாடு முழுதும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஏற்கனவே ராகுல் ஜாமீனில் உள்ளார். பாராளுமன்றம், சட்டம், நாடு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக ராகுல் தன்னை நினைக்கிறார். காந்தி குடும்பத்தில் இருந்து வந்ததால் கிடைக்கும் சிறப்புரிமை இது என அவர் கருதுகிறார் என்றார்.
இந்நிலையில் நாடு முழுதும் ராகுல் மீதான அவதூறு வழக்குகள் உள்ளன. நேற்று நடந்த வழக்குகளுடன் இதுவரை 7 வழக்குகளில் ராகுல் ஜாமின் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன் விவரம்:
* 2015-ல் பா.ஜ.வை சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் ராகுல் , அவரது தாயார் சோனியா ஆகிய இவரும் ஜாமீனில் உள்ளனர்.
* 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், பீஹார் துணை முதல்வராக இருந்த சுஷில் குமார் மோடி குறித்தும் அவரது சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாட்னா கோர்ட் ஜாமின் வழங்கியது.
* 2019-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில், ஆமதாபாத் கோர்ட்டில் ஜாமின் பெற்றார்.
*2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வக்கில் மும்பை கோர்ட் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.