புதுடில்லி: எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று (25ம் தேதி) செய்தியாளர்களை ராகுல் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருடர்களுடன் மோடி என்னும் சமுதாய பெயரை ஒப்பிட்டு பேசியதாக தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், காங்.,எம்.பி., ராகுலுக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. உடனே ஜாமின் வழங்கி மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு தரும் வகையில், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தியும் வைத்துள்ளது.
![]()
|
இந்நிலையில் ராகுல் எம்.பி.பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக லோக்சபா செயலர் இன்று அறிவித்தார்.
அவசர கூட்டம்
இது குறித்து காங்., அவசரக் கூட்டம் டில்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் சோனியா, மல்லிகார்ஜூனா கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
எம்.பி. பதவி பறிபோன நிலையில் காங்., கட்சியைச் சேர்ந்த ராகுல், இன்று (25ம் தேதி) காலை செய்தியாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.