அடங்கமாட்றாங்கய்யா... மின் இணைப்புக்கு லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது
அடங்கமாட்றாங்கய்யா... மின் இணைப்புக்கு லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது

அடங்கமாட்றாங்கய்யா... மின் இணைப்புக்கு லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது

Added : மார் 24, 2023 | |
Advertisement
பொதட்டூர்பேட்டை:புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அருகே, பொம்மராஜிபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கணபதி, 50, வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 32, தான் புதிதாக
Do not include... Bribe business inspector arrested for electricity connection   அடங்கமாட்றாங்கய்யா... மின் இணைப்புக்கு லஞ்சம் வணிக ஆய்வாளர் கைது

பொதட்டூர்பேட்டை:புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அருகே, பொம்மராஜிபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கணபதி, 50, வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 32, தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளார். அவரிடம், கணபதி 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி நேற்று காலை பொம்மராஜிபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்த கணபதியிடம், பிரகாஷ் பணம் கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணபதியை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X