சூளைமேடு, சூளைமேடு 'சிக்னல்' இருந்து, ஹாரிங்டன் சாலை செல்லும் வழியில், சூளைமேடு இணைப்பு பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் இருபுறமும், அப்பகுதிகளில் வசிப்போர், ஆட்டோ மற்றும் கனரக வானங்களை அத்துமீறி நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இணைப்பு பாலத்தில், பல ஆண்டுகளாகவே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இரவு நேரத்தில், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள போலீசாரும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.