வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'ஒருவர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்துக்காக மட்டும், அவரை குற்றவாளியாக கருத முடியாது என, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தவறானது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![]()
|
வட கிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த அரூப் புயான் என்பவர், தடை செய்யப்பட்ட, 'உல்பா' அமைப்பின் உறுப்பினராக இருந்தார் என்பதற்காக, தடா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011ல் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
ஒருவர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்துக்காக மட்டும், அவரை குற்றவாளியாக கருத முடியாது.
அவர் வன்முறையில் ஈடுபட்டாலோ, வன்முறையில் ஈடுபடும்படி மக்களை துாண்டிவிட்டாலோ மட்டுமே அவரை குற்றவாளியாக கருத முடியும்.
இவ்வறு தீர்ப்பளித்த நீதிமன்றம், அரூப் புயானை வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து, அசாம் மற்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார், சஞ்சய் கரோல் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஒருவர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்துக்காக மட்டும், அவரை குற்றவாளியாக கருத முடியாது என, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு தவறானது.
![]()
|
ஒருவர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியும்.
இந்தியாவில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து, முந்தைய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement